இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
X

இராசிபுரத்தில் வ.உ.சி 150வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி சார்பில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழா இராசிபுரத்தில் நடைபெற்றது.

மகாலட்சுமி நகரில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் தலைமை வகித்தார். வ.உ.சியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் வேங்கை சிவக்குமார், ராசிபுரம் நகர பொறுப்பாளர் சங்கமேஸ்வரன், சமூக ஆர்வலர் காந்தி சங்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!