லாரி மோதியதால் டூ வீலரில் சென்ற சலூன் கடைக்காரர் உயிரிழப்பு

லாரி மோதியதால் டூ வீலரில் சென்ற சலூன் கடைக்காரர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News in Tamil -மல்லூர் அருகே லாரி மோதியதால் டூ வீலரில் சென்ற சலூன்கடைக்காரர் உயிரிழந்தார்.

Today Accident News in Tamil - ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அடுத்த கீரனூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் மல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். அவர் நேற்று காலை சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லூர் அருகே உள்ள வலசு பகுதியில் ரோட்டைக் கடக்க முயன்றபோது, சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்று டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற வெண்ணந்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story