தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா

தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா
X

தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழாவில் ராசி சீட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி பேசினார்.

இராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.

தொ.ஜேடர்கபளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1950-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளியின் மையக் கட்டடம் பழுதடைந்திருந்தது. இதையொட்டி, வக்கீல் செங்கோட்டுவேல் நினைவாக அக்சென் அறக்கட்டளையால் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டிடம் சீரமைத்து தரப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு ராசி சீட்ஸ் விதை நிறுவனத்தின் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் ஜோதிகண்மணி வரவேற்றார். தனலட்சுமி செங்கோட்டுவேலு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் மணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காசிவிஸ்வநாதன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி முத்துநல்லியப்பன், அறக்கட்டளை இயக்குநர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!