Begin typing your search above and press return to search.
கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS

இராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே கல்லாங்காட்டனூர், ஓலப்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார், அந்த கோழிப்பண்ணையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழித்தீவனம் அரைப்பதற்காக, ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்கு 200 மூட்டைகளில் இருந்த சுமார் 10 டன் ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் மனோபாரதி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.