ராசிபுரத்தில் நாமக்கல் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்கள் சங்கக் கூட்டம்

ராசிபுரத்தில் நாமக்கல் மாவட்ட வீடியோ,  போட்டோகிராபர்கள் சங்கக் கூட்டம்
X

ராசிபுரத்தில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட வீடியோகிராபர்கள் சங்கக் கூட்டத்தில், சங்க மாநில தலைவர் மாதேஸ்வரன் கலந்துகொண்டு உயிரிழந்த உறுப்பினர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கினார். அருகில் மாவட்ட தலைவர் நித்தியானந்தம்.

நாமக்கல் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவர் நித்தியானந்தம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தென்றல் நிலவன், பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க மாநிலத்தலைவர் மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சங்க உறுப்பினர்கள் ஜெயபால், வசந்த் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகையை வழங்கினார்.

கெரோனா தொற்று பாதிப்பால், உயிரிழந்த புகைப்படக் கலைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும், புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்,

திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்வுகள் நடத்திட அரசு தளர்வு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் ராசிபுரம் தாலுக்கா சங்கத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai healthcare technology