சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்த ராசிபுரம் தாசில்தாரின் கார்

சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்த ராசிபுரம் தாசில்தாரின் கார்
X

புதுச்சத்திரம் அருகே தீப்பிடித்து எரிந்த ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயனின் கார்.

Car Fire Accident -ராசிபுரம் தாசில்தாரின் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்து சேதமானது.

Car Fire Accident - ராசிபுரம் தாசில்தாரின் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்து சேதமானது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாசில்தாராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இவர் நேற்று காலை தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியில் சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உடனடியாக, ரோட்டோரம் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் இறங்கி விட்டனர்.

வேகமாக பரவிய தீயால் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்