ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
X
ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றிக் கொண்டு, சரக்கு ஆட்டோ ஒன்று சேலம் நோக்கி சென்றது. சேலம் கோரிமேட்டை சேர்ந்த பெருமாள் (56) என்ற டிரைவர் அந்த ஆட்டோவை ஓட்டிச்சென்றார். ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.

அப்போது ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பெருமாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture