இராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.12 கோடி மதிப்பு திட்டப்பணிகள் துவக்கம்

இராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.12 கோடி மதிப்பு திட்டப்பணிகள் துவக்கம்
X

இராசிபுரம் நகராட்சியில் ரூ. 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்.

இராசிபுரம் நகராட்சியில் ரூ. 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு நீடித்த நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ராசிபுரம் நராட்சிப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்து தார் ரோடு மற்றும் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராசிபுரம் நகரில் மேற்கு காலனி, குமாரசாமி தெரு, சிவன் கோவில் தெரு, மின்வாரிய காலனி சாலை, இந்திரா காலனி போன்ற பகுதியின் மழைநீர் வடிகால் அமைத்தல், சிறுபாலம் அமைத்து தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

குமாரசாமி தெரு, சிவன் கோவில் தெருவில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணியும், சுவாமி சிவானந்தா சாலை, ஏஞ்சல்ஸ் காலனி, சிங்கான் சந்து, எல்லப்பா தெருவில் மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைத்து தார்சாலை, கான்கிரீட் சாலை அமைத்தல் பணி நடைபெற உள்ளது.

நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள பணிகள் துவக்க விழா, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நகர திமுக செயலாளர் சங்கர், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் நகராட்சித்தலைவர் அரங்கசாமி, நகராட்சி கமிஷனர் (பொ) கிருபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், அருளரசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story