ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா

ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா
X

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற, விளையாட்டு விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரி அப்துல் ரஷீத் கோப்பைகள் வழங்கினார். 

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரி அப்துல் ரஷீத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்சிச்யில் வருவாய் துறை ஆய்வாளர் சேகர், கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை தலைவர் சிவகுமார், விளையாட்டு குழு ஆலோசகர்கள் சதாசிவம், பிரகாஷ், சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக உடற்கல்வி இயக்குனர் வெண்ணிலா ஆண்டறிக்கை வாசித்தார்.

Tags

Next Story