ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: அமைச்சர் வழங்கினார்

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்பு பூஞ்சை  தடுப்பு மருந்து: அமைச்சர் வழங்கினார்
X

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தின் வழங்கினார். 

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கருப்பு பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட திமுக இன்ஜினியர்கள் அணி சார்பில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கருப்பு பூஞ்சை நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மருந்துகளை ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் வழங்கினார்.

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், ஆஸ்பத்திரிதலைமை டாக்டர்கள் ஜெயந்தி, கலைச்செல்வி, மாவட்ட திமுக பொருளாளர் செல்வம், நகர செயலாளர் சங்கர், கார்த்திக், ராசிபுரம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் ஜெகநாதன், மாவட்டபொறியாளர் அணி மாணிக்கம், துறைசாமி, அருள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!