ராசிபுரம்: ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ராசிபுரம்: ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி  வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
X
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்கக்கோரி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராசிபுரம் தாலுக்கா புதுப்பட்டி அருகேயுள்ள ஈச்சப்பாறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஒட்டி நீரோடை உள்ளது. மேலும், மேலும், விவசாயத் தோட்டத்தையொட்டி நீண்டகாலமாக பாதை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதை மற்றும் நீரோடையை மறித்து, தனியார் தரப்பில் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை, காவல் துறையிடம் புகார் மனு அளிதனர். இதையொட்டி, ராசிபுரம் வட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அதன்பிறகும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நேரில் சென்ற போலீசார் மற்றும் அதிககாரிகள், சம்மந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து ஒரு சில நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!