இராசிபுரம் பேருந்து நிலையத்தில் தரமான கட்டிடங்கள்: எம்.பி., சின்ராஜ் வலியுறுத்தல்

இராசிபுரம் பேருந்து நிலையத்தில் தரமான கட்டிடங்களை கட்ட வேண்டும் என நாமக்கல் எம்.பி., சின்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இராசிபுரம் பஸ் நிலையத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கடைகளை இடித்துவிட்டு, தரமான முறையில் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று எம்.பி சின்ராஜ் வலியுறுத்தினார்.

இராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில், நகராட்சிக்கு சொந்தமான 41 கடைகள் உள்ளன. இந்த கடைகளை தனியார் வாடகைக்கு எடுத்து பெட்டிக்கடைகள், டீக்கடைகள், பேன்சி ஸ்டோர், செல்போன் கடை போன்ற கடைகளை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். தற்போது கடைகளின் மேற்கூரைப்பகுதி சேதமடைந்ததால் நகராட்சி நிர்வாகம் கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் அமைக்க முடிவு செய்தனர்.

நகராட்சியில் போதிய நிதி வசதி இல்லாததால், தற்காலிகாகமாக பழைய கட்டிடத்தின் மேற்கூரையை மட்டும் மாற்றி தகரத்தால் ஆன கூரை அமைத்து மீண்டும் வாடகைக்கு விட முடிவு செய்தனர். தகர மேற்கூரை அமைக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்று வேகமாக அடித்ததால் நகராட்சிக் கடைகளின் மேற்கூரையில் இருந்து தகரம் காற்றில் பறந்து சேமதடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் எம்.பி., சின்ராஜ், இராசிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து சேமதடைந்த நகராட்சிக் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டிடத்தின் சுவற்றில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பொடிப்பொடியாக கீழே விழும் நிலையில் இருந்தததைக்கண்ட எம்.பி., சின்ராஜ் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

பின்னர் நகராட்சி கமிஷனர் (பொ) கிருபாகரன் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடித்துவிட்டு தரமான முறையில் கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளையும், கான்ட்ராக்டரையும் வலியுறுத்தினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி