ராசிபுரம்: பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

ராசிபுரம்: பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
X

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி,  கிராம மக்கள் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் அருகே, பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகையிட்டனர்.

ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் - தொப்பப்பட்டி இடையே உள்ள நல்லதண்ணிக்காடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, தனியார் சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், சிங்களாந்தபுரம், தொப்பப்பட்டி கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாõரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!