மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி

மருத்துவர்கள்  செவிலியர்களுக்கு மனநல பயிற்சி
X
இராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்பட்டது. இது குறித்து மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ், உளவியலாளர் அர்ச்சனா ஆகியோர் கூறியதாவது :

கொரானா தொற்று இரண்டாம் அலை காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு மனநல பயிற்சி கட்டாயம் தேவைப்படுகிறது. பயம், பதற்றம் எல்லாவித நோய்களிலும் ஓர் அறிகுறியாக தோன்றுகிறது. சில சமயம் அதுவே ஒரு நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நிம்மதியான தூக்கம் வருவதில்லை. இதனால் மன அழுத்தம் அதிகமாகிறது. அடுத்த நாள் வேலை பார்ப்பதில் பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

அளவிற்கு அதிகமான பயம் மற்றும் பதட்டத்தினால் மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனை தவிர்க்க நாள்தோறும் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன இறுக்கம் தளரும் மனதில் அமைதி நிலவும். மன அழுத்தத்தைக் குறைக்க டிரஸ் பால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். இதனை மேற்கொள்வதன் மூலம் மன இறுக்கம் தளரும். மனதில் அமைதி நிலவும். இரவினில் நன்றாக உறங்கலாம். மன அழுத்தத்தை குறைக்க மூச்சுப் பயிற்சி அவசியம். இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மனநல பயிற்சி வழங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!