நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் மனநல மேலாண்மை பயிற்சி

நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் மனநல மேலாண்மை பயிற்சி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட மன நலத்திட்டம் சார்பில், நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மன நல மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட மன நலத்திட்டம் சார்பில், நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மன நல மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

அரசு மன நல மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவிகளிடையே பேசுகையில், பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும், சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

அளவிற்கதிகமான பயமும் பதற்றமும் மன அழுத்தமும் இதனால் ஏற்படுகின்றன. மேலும் அனைவரும் இரவு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள் மன இறுக்கத்தை தளர்த்தவும், மனதை வலுப்படுத்தவும் உதவுகின்றன. தியானம், யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் இறுக்கம் தளரவும், மனதில் அமைதி நிலவவும் உதவும் என்றார்.

மனநல ஆலோசகர் ரமேஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். மாணவிகளுக்கு அழுத்தத்தை குறைக்க பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!