சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை

சீரான குடிநீர் சப்ளை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை
X

சீரான குடிநீர் வழங்கக்கோரி, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமகிரிப்பேட்டையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் உள்ள 13-வது வார்டு, மேற்கு தெரு பகுதியில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் கோரையாற்று குடிநீர், 10 நாட்களுக்கு ஒருநாள் மட்டுமே வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சில தினங்களுக்கு முன்பு, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தங்களுக்கு காவிரி குடிநீர் மட்டும் வழங்கும்படி மனு அளித்தனர்.

ஆனால், மீண்டும் காவிரி தண்ணீரும், கோரையாற்று தண்ணீரும் கலந்து விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சீரானா முறையில் காவிரி குடிநீர் மட்டும் வழங்கக்கோரி, இ. கம்யூனிஸ்ட் கட்சியின் பேரூர் செயலாளர் ரவிநாத் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார், பொதுமக்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ராசப்பன் மற்றும் போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு சீரானா காவிரி குடிநீர் விநியோகம்செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தததை ஏற்று, பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!