கேஸ் விலை உயர்வை கண்டித்து இராசிபுரத்தில் விறகு சுமந்து போராட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து இராசிபுரத்தில் விறகு சுமந்து போராட்டம்
X

சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, இராசிபுரத்தில் பெண்கள் விறகு சுமக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, இராசிபுரத்தில்பெண்கள் விறகு சுமக்கும் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து, விறகு சுமக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, திரளான பெண்கள், மாதா கோவில் அருகில் இருந்து விறகு மற்றும் கியாஸ் சிலிண்டர்களை தலையில் சுமந்து கொண்டு போராட்டம் நடந்த இடத்திற்கு பேரணியாக வந்தனர்.

போராட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ராணி தலைமை வகித்தார். பொருளாளர் பழனியம்மாள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் சரசு, சரோஜா, தங்கமணி, சிந்து, மல்லிகா, மணி உள்பட திரளான பெண்கள்பெண்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது: சமையல் கேஸ் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.610-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 மாதங்களில் மத்திய அரசு தொடர்ந்து விலையை உயர்த்தி தற்போது ரூ.950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பரவல் காலத்தில் பொருளாதார நெருக்கடியில் அனைத்து மக்களும் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தொடர்ந்து சமையல் கேஸ் விலையை உயர்த்தி வருவதால் பெண்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில், மத்திய அரசு சமையல் கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விறகு சுமக்கும் போராட்டம் நடத்தப்பட்டது என்றனர்.

Tags

Next Story
ai in future agriculture