ராசிபுரம் பகுதியில் மின் நிறுத்த அறிவிப்பு..!

ராசிபுரம் பகுதியில் மின் நிறுத்த அறிவிப்பு..!
X

மின் தடை (கோப்பு படம்)

ராசிபுரம் பகுதியில் வரும் 20ம் தேதி புதன் கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் மின் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ராசிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் 20.12.2023 அன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கீழ்காணும் இடங்களில் அன்றைய தினம் மின் விநியோகம் தடைசெய்யப்பட்டிருக்கும். ராசிபுரம், முத்துக்களிப்பட்டி, மசக்காளிப்பட்டி,புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி,சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப்பாளையம்,வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி, குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!