நாமக்கல் மாவட்டத்தில் 99 சதவீத ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 99 சதவீத ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
X

இராசிபுரம் புதுப்பாளையத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அருகில் முன்னாள் எம்.பி சுந்தரம்.

நாமக்கல் மாவட்டத்தில் 99 சதவீதம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

இராசிபுரம் தாலுக்கா, ஆர்.புதுப்பாளையத்தில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமை வகித்தார்.

ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் 99 சதவீதம் ரேசன் கார்டுகளுக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முழு கரும்பு, ஆவின் நெய்யுடன் 21 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர். இதுவரை வாங்காதவர்கள் இம்மாதம் முழுவதம் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

விழாவில் முன்னாள் எம்பி சுந்தரம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகந்நாதன், ஒன்றிய திமுக பொறுப்பாளர் துரைசாமி, டவுன் பஞ்சாயத்து செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் துரைசாமி, ராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர், மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாம்சம்பத், பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!