மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: அரசுக்கு பாராட்டு

மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: அரசுக்கு பாராட்டு
X

மருத்துவ படிப்பில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததாகக்கூறி, முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி, இராசிபுரம் நகரில், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் துண்ட பிரசுரங்களை விநியோகம் செய்தார். 

மருத்துவ படிப்பில் பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததாக, முதல்வர் ஸ்டாலினை திமுகவினர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்து, அனைத்து மாநிலங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டியதாக, தமிழக முதல்வர் ஸ்டாலினை, திமுகவினர் பாராட்டி வருகினனர். அவ்வகையில், இராசிபுரம் வி.நகரில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நகர செயலாளர் சங்கர், அவை தலைவர் அமிர்தலிங்கம், துணை செயலாளர்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், பொருளாளர் நாகேஷ்வரன் உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story