இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி வைப்பு

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி வைப்பு
X

இராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பிலா புதிய சாலையை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தார்சாலை அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ள பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 79 இடங்களில் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. வார்டு எண். 8 பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிகள் ரூ. 8 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. மொத்தம் ரூ.13 கோடி மதிப்பீட்டில் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராசிபுரம் நகராட்சி கமிஷனர்ஆஅசோக்குமார், நகராட்சி பொறியாளர் கிருபாகரன், முன்னாள் எம்.பி சுந்தரம், நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!