இராசிபுரம் அரசு கல்லூரியில் புதிய ஹாஸ்டல் கட்டிடம்திறப்பு விழா

இராசிபுரம் அரசு கல்லூரியில் புதிய  ஹாஸ்டல் கட்டிடம்திறப்பு விழா
X

இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி, புதிய ஹாஸ்டல் திறப்பு விழாவில், நாமக்கல் எம்.பி சின்ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில், புதிய மாணவிகள் ஹாஸ்டலை, தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இராசிபுரம், ஆண்டகலூர்கேட்டில், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தமிழக அரசின், தாட்கோ துறையின் மூலமாக 50 மாணவிகள் தங்குவதற்காக புதிய ஹாஸ்டல் கட்டப்பட்டுள்ளது. புதிய ஹாஸ்டல் கட்டிடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.பி சின்ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியதலைவர் ஜெகநாதன், கொமதேக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், தாõட்கோ அலுவலர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!