நாமகிரிப்பேட்டையில் மகளிர் குழு கட்டிட பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

நாமகிரிப்பேட்டையில் மகளிர் குழு கட்டிட பணி   அமைச்சர் துவக்கி வைத்தார்
X

நாமகிரிப்பேட்டை அருகே ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட திமுக பொறுப்பளர் ராஜேஷ்குமார்.

நாமகிரிப்பேட்டை அருகே ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊனந்தாங்கல் கிராம பஞ்சாயத்து உள்ளது.

இங்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் துவக்க விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.பி சுந்தரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!