செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: ராசிபுரத்தில் பேருந்துகள் ஆய்வு

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: ராசிபுரத்தில் பேருந்துகள் ஆய்வு
X

பள்ளி, கல்லூரி பேருந்துகளை ஆய்வு செய்யும் போக்குவரத்து துறையினர்.

செப். 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், ராசிபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி பேருந்துகளை போக்குவரத்துத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அடுத்த மாதம் 1ம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 9,10,11,12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, இராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களை நாமக்கல் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, லைட்டுகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் செயல்படுகிறதா, வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்து, குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு சான்றளிக்கப்பட்டது.

இதில், 32 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 7 வாகனங்களில் அவசரகால வழி, நடைபாதை பலகை, படிக்கட்டு, முதலுதவிப் பெட்டி மருந்துகள், தீயணைக்கும் கருவிகள், டிரைவர் சீட்டிற்கான தடுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

அதனை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்