ராசிபுரம் அருகே அதிசயம்...! இலை இல்லாத மா மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்து குலுங்கும் மாங்காய்கள்
ராசிபுரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரின் தோட்டத்தில் இலையே இல்லாத மாமர கிளையில் கொத்து கொத்தாய் காய்த்துக்குலுங்கும் மாங்காய்கள்.
ராசிபுரம் :
ராசிபுரம் அருகே மா மரத்தின் ஒரு கிளையில் மட்டும் கொத்து கொத்தாய் மாங்காய்கள் காய்த்து தொங்கும் அதிசயத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இரண்டு மா மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு மரத்தின் கிளையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டியுள்ளார். அக் கிளையில் சில நாட்களுக்கு பின் இலைகள் ஏதும் இல்லாத நிலையில், ஏராளமான பூக்கள் மட்டும் பூத்தன. அதைத் தொடர்ந்து அக் கிளையில் மா பிஞ்சுகள் உருவாகியது. தற்போது அவை பெரிதாகி கிளை முழுவதும் மாங்காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து குலுங்குகின்றன. மரத்தில் இலையே இல்லாத கிளையில் மாங்காய்கள் அதிக அளவில் காய்த்து தொங்குவது அதிசயமாக இருக்கிறது. அதை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu