வெண்ணந்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

வெண்ணந்தூர் ஒன்றிய அதிமுக சார்பில்  உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
X

வெண்ணந்தூரில் நடைபெற்ற அதிமுக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

இராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி நிழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், தேர்தல் பணி, வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் கிளைக்அமைப்பு நிர்வாகிகள் தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு