ஹால்மார்க் உத்தரவை கண்டித்து இராசிபுரத்தில் நகைக் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஹால்மார்க் உத்தரவை கண்டித்து இராசிபுரத்தில் நகைக் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை கண்டித்து இராசிபுரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராசிபுரத்தில் நகை கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தெரிவித்து இராசிபுரத்தில் நகை கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பெரிய கடை வீதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறை உரிமையாளர்கள், 2 மணி நேரம் கடைகளை அடைத்து, கடைகளின் முன்பாக கோரிக்கை அடங்கிய பேனர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின், புதிய நடைமுறையால் சிறு தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் நகை செய்யும் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்யக்கொரி அவர்கள் கோஷமிட்டனர். இராசிபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!