இராசிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை மற்றும் மரக்கன்றுகள் வழங்கல்

இராசிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை மற்றும் மரக்கன்றுகள் வழங்கல்
X

இராசிபுரத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக மூலிகைச் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இராசிபுரத்தில் அரசு சித்த மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மூலிகை செடிகள், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இராசிபுரத்தில் அரசு சித்த மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்,பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் மற்றும் செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ், இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நேரிடையாகச் சென்று மூலிகைச் செடிகள், மரக்கன்றுகளை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, இராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு, கொய்யா, நெல்லி, சரக்கொண்றை, வேம்பு போன்ற மரக்கன்றுகள் மற்றும் பல்வேறு மூலிகை செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் அவற்றைப் பெற்றுச்சென்றனர்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பழகன், ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி கவர்னர் பாலாஜி, சங்க செயலாளர் சுரேந்திரன், முன்னாள் தலைவர்கள் கதிரேசன், ரவி, கருணாகர பன்னீர்செல்வம், அரசு சித்த மருத்துவர்கள் மோகனசுந்தரம், புனிதவதி, பாலாமணி, ஆசைத்தம்பி, அகிலா, தேவிகா, ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!