ராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி: திரளானவர்கள் பங்கேற்பு

ராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு  பேரணி: திரளானவர்கள் பங்கேற்பு
X

ராசிபுரத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராசிபுரத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணியை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராசிபுரம் நகரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கம், அரசு தலைமை ஆஸ்பத்திரி, இராசிபுரம் நகராட்சி, இந்திய மருத்துவ சங்க இராசிபுரம் கிளை, ஹனிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வுப் பேரணிக்கு, இராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் கொடியசைத்துப் பேரணியைத் துவக்கிவைத்தார்.

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு தொடங்கிய பேரணி, பழைய பஸ் நிலையம், கடை வீதி, கச்சேரி சாலை வழியாக சென்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத்தினர், மருத்துவ கல்லூரி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் பேரணியில் பங்கேற்று பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கியும், துண்டுப் பிரசுங்கள் வழங்கியும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ரோட்டரி சங்க மண்டல உதவி கவர்னர் குணசேகர், முன்னாள் உதவி கவர்னர் பாலாஜி, சங்க செயலாளர் சுரேந்திரன், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் சதாசிவம், கிருஷ்ணன், சுகவனம், ராமகிருஷ்ணன், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!