நா.பேட்டை டவுன் பஞ்சாயத்து அலவலக வாட்ச்மேன் கொலை: போலீஸ் விசாரணை

நா.பேட்டை டவுன் பஞ்சாயத்து அலவலக வாட்ச்மேன் கொலை: போலீஸ் விசாரணை
X

பைல் படம்.

Police Investigation -நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாட்ச்மேனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Police Investigation -ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்ன அரியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (65). இவருக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், முருகன் (40), அழகேசன் (38) என்ற 2 மகன்களும் உள்ளனர். பரமசிவம் நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தல் நைட் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். வாரந்தோறும் விடுமுறை நாளான சனிக்கிழமை மாலை வேலைக்கு வந்தால் தொடர்ந்து திங்கட்கிழமை வரை பணியில் இருப்பார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரமசிவம் மற்றும் பொக்லைன் இயந்திர டிரைவர் ரஞ்சித்குமார் (26) ஆகியோர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில் பரமசிவம் அங்குள்ள டிராக்டர் செட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவருடைய இடுப்பு மற்றும் கால்கள் கயிறால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமானோர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திரண்டனர். பரமசிவம் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு வந்த மாவட்ட எஸ்.பி சாய்சரன்தேஜஸ்வி இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பரமசிவத்தின் உடலில் சந்தேகிக்கும் வகையில் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால் காலும், இடுப்பும் கயிறால் கட்டப்பட்டு இருக்கிறது. எனவே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மூத்த டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடயவியல் நிபுணர்களை கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஏடிஎஸ்பி சேகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. டவுன் பஞ்சாயத்து அலுவலக பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். விரைவில் விசாரணை முடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!