நாமகிரிப்பேட்டை: கல் குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

நாமகிரிப்பேட்டை: கல் குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(55). இவருக்கு சொந்தமான நிலத்தில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் தண்ணீர் குட்டையாக தேங்கியுள்ளது.

புதுப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள். இவர் தற்போது, சேலம் கன்னங்குறிச்சியில் வசித்து வருகிறார். அருள் குடும்பத்துடன் புதுப்பட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று அவருடைய மகன் ஜெஸ்வின் (8) மற்றும் சில சிறுவர்கள் நீச்சல் பழகுவதற்காக கல்குவாரி குட்டைக்கு சென்றனர். அப்போது குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜெஸ்வின் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேட்டு தலைமையிலான தீயணைப்பு படையினர், குட்டைக்குள் 3 மணி நேரம் தேடி சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்