இராசிபுரம்: புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

இராசிபுரம்: புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
X

இராசிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி திறந்து வைத்தார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்.

இராசிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் மதிவேந்தன் வெற்றிபெற்று, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதையொட்டி, இராசிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு விழா, அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அலுவலகத்தை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. சுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள், ராமசாமி, சரஸ்வதி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகாநாதன், நகர திமுக செயலாளர் சங்கர், டாக்டர் மாயவன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!