/* */

மலையாம்பட்டியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

மலையாம்பட்டியில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மலையாம்பட்டியில்  குடிநீர் தொட்டி  திறப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு
X

இராசிபுரம் அருகே மலையாம்பட்டியில் புதிய குடிநீர் தொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டியில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார். மேலும், வடுகம் காலனியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், பட்டணம் டவுன் பஞ்சாயத்து நேரு நகரில், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

மலையாம்பட்டி, வடுகம், பட்டணம், பிள்ளாநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில் பொதுமக்களுடன் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இந்நிகழ்ச்சிகளில், நாமக்கல் சப்கலெக்டர் மஞ்சுளா, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைசாமி, பாலச்சந்திரன், சத்யா வெங்கடாச்சலம், முன்னாள் எம்.பி சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 2:39 AM GMT

Related News