அரசு பள்ளி மாணவர் 5 பேர் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவத்தில் சேர்க்கை
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட தேர்வு மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் தீபக்குமார் 426 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் 21வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.
இதே பள்ளி மாணவர்கள் கனிதரன் தரவரிசைப் பட்டியலில் மாவட்ட அளவில் 2-ஆம் இடமும், மாணவர் கார்திக் ராஜ் 3-ஆம் இடமும் பிடித்தனர். மாணவர் கஜேந்திரன் எஸ்.டி பிரிவிலும், மாணவர் நவீன்குமார் எஸ்.சி.ஏ பிரிவிலும் மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்றுள்ளனர். ஒரே பள்ளியில் படித்த 5 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம் பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் சேர்க்கை பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார், பிடிஏ தலைவர் துரைசாமி, பள்ளியின் நீட் ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன், ஆசிரியர்கள் செல்வராசு, சேகர், கோமதி, சிசுபாலதனசேகர், சிவபிரகாசம் ஆகியோர் பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu