ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து மேஸ்திரி தற்கொலை

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து மேஸ்திரி தற்கொலை
X

பைல் படம்.

Commit Suicide - ராசிபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

Commit Suicide -சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (37). கட்டிட மேஸ்திரி, இவர் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் தங்கராஜ் வெண்ணந்தூரில் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் தங்கராஜ் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story