நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெரியகோம்பை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் எஸ்.ஐ மனோகரன் தலைமையிலான போலீசார் பெரியகோம்பை பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மாணிக்கம் (56) என்பவரது வீட்டில், அதிக விலைக்கு விற்பதற்காக 60 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணிக்கத்தை கைது செய்த போலீசார் அங்கிருந்த 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future