இராசிபுரம் அருகே தேங்காய் நார் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

இராசிபுரம் அருகே தேங்காய் நார் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்
X

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

இராசிபுரம்-சேலம் பைபாஸ் ரோட்டில் தேங்காய் நார் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

இராசிபுரம்-சேலம் பைபாஸ் ரோட்டில், ஒரு லாரி தேங்காய் நார் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அணைப்பாளையம் பகுதியில் சென்றபோது, அந்த லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதைக்கண்ட டிரைவர் லாரியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு வெளியே தப்பிக்குதித்து ஓடிவிட்டார்.

தகவல் கிடைத்ததும், தீயைணப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அந்த லாரி முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து இராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!