நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வெற்றி

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில், திமுக வேட்பாளர் 15,809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்ககான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 9ம் தேதி நடைபெற்ற வக்குப்பதிவில் மொத்தம் 43 ஆயிரத்து 464 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் எண்ணும் பணி வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மொத்தம் 12 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டன. இரவு 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி.மு.க. வேட்பாளர் துரைசாமி, 28 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கண்ணனை விட 15,809 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணன் 12 ஆயிரத்து 983 வாக்குகள் பெற்றார்.

தேர்தலில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணன் 439 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் மாரியப்பன் 413 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் சாந்தி 213 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் கோபால் 67 வாக்குகளும் பெற்றனர். தோல்வி அடைந்த வேட்பாளர்களில் அ.தி.மு.க. வேட்பாளரைத் தவிர மற்ற 10 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். வெற்றி பெற்ற துரைசாமிக்கு தேர்தல் அலுவலர் பிரியா சான்றிதழை வழங்கினார். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, முன்னாள் எம்.பி. சுந்தரம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!