இராசிபுரத்தில் போலீஸ் டிஎஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

இராசிபுரத்தில் போலீஸ் டிஎஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
X

பைல் படம்.

இராசிபுரம் போலீஸ் நிலையத்தில், வக்கீலை அவமரியாதை செய்ததாக, டிஎஸ்பியைக் கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இராசிபுரம் போலீஸ் நிலையத்தில், வக்கீலை அவமரியாதை செய்ததாக, டிஎஸ்பியைக் கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ராசிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் குமார் என்பவர், தனது கட்சிக்காரரின் புகார் சம்மந்தமாக ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டிஎஸ்பி செந்தில்குமார், வக்கீலை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராசிபுரம் கோர்ட்டுகளை ஒரு நாள் புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. இது சம்மந்தமாக அவர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future