பேளுக்குறிச்சியில் வாடகை கார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் துவக்கம்

பேளுக்குறிச்சியில் வாடகை கார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் துவக்கம்
X

பைல் படம்.

பேளுக்குறிச்சியில், வாடகைக் கார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

இராசிபும் தாலக்கா, பேளுக்குறிச்சியில், வாடகைக் கார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவுக்கு, சங்கத் தலைவர் மாதையன் (எ) பாண்டியன் தலைமை வகித்தார். பேளுக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் செல்வம் அபிமன்னன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் எஸ்.ஐ ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சங்கப்பலகையை திறந்து வைத்தார். சங்க செயலாளர் நாகராஜ், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா