குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்
X

குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கிய எம் பி.

இராசிபுரம் பகுதியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டத்தை எம்.பி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 247 மையங்களில் உள்ள 2,997 பள்ளிக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துடன் கூடிய சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இராசிபுரம் பகுதியில் இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இரும்புச் சத்து சிறுதானிய பிஸ்கட் உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா, ஆர்.கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், 3 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க இரும்புச் சத்து நிறைந்துள்ள சிறுதானிய பிஸ்கட் உணவுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பள்ளிபாளையம் ஆகிய 2 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ராசிபுரம் வட்டத்தில் 78 அங்கன்வாடி மையங்களில் 758 குழந்தைகளுக்கும், பள்ளிபாளையம் வட்டத்தில் 169 மையங்களில் 2,239 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2 வட்டாரங்களில் முன்னோடி திட்டமாக 2,997 குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் 2022 அக்டோபர் மாதம் முடிய வேலை நாட்களில் சிறுதானிய பிஸ்கட்டுகள் வழங்கப்படும். சோளம், கம்பு, வரகு, சாமை, ராகி, கோதுமை, மைதா, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், வெல்லத்தூள், சமையல் சோடா ஆகிய கலவையோடு இரும்புச் சத்து மிகுந்த சிறுதானிய பிஸ்கட் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

குழந்தைகள் மையப் பணியாளர்கள், குழந்தைகள், பெற்றோர் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், சுகாதாரம் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவற்றை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகநாதன், பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கார்த்திகேயன், ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!