நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விற்பனையை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் மையம்
காய்கறி விற்பனை (மாதிரி படம்)
காய்கறி விற்பனை, விநியோகம் சம்மந்தமான குறைபாடுகளை தெரிவிக்க நாமக்கல் கலெக்டர் ஆபீசில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் இருந்து காய்கறி மற்றும் பழங்களை கொள்முதல் செய்து, வாகனங்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்ய கடந்த 24ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை விற்பனைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு விற்பனைக்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை சுமார் 500 காய்கறி வாகனங்கள் தினசரி அனுப்பி வைக்கப்படுகின்றன.
காய்கறி விற்பனை சேவை தொடர்பான குறைபாடுகளை தெரிவிக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொது மக்கள் காய்கறி, பழவகை விற்பனை, விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவிக்க மாவட்ட கலெக்டர் ஆபீசில் செயல்படும் ஒருங்கிணைந்த தகவல் மையத்திற்கு 94891 34961 என்ற செல்போன் நம்பரில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu