வெண்ணந்தூரில் திமுக நன்றி அறிவிப்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

வெண்ணந்தூரில் திமுக நன்றி அறிவிப்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
X

வெண்ணந்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். அருகில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.

வெண்ணந்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இராசிபும் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாசம்பட்டியில் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் செல்வம், ஒன்றிய திமுக செயலாளர்கள் வெண்ணந்தூர் துரைசாமி, நாமகிரிப்பேட்டை ராமசுவாமி, ராசிபுரம் ஜெகநாதன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், பட்டணம் டவுன் பஞ்சாயத்து செயலாளர் பொன்நல்லதம்பி, கட்டனாச்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை, கலை பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பூபாலன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!