இராசிபுரம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்

இராசிபுரம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே பெங்களூரிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் போலீசாரக்கு உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இராசிபுரம் நகராட்சி, காட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த செந்தில் (39) என்பவர் தனது மளிகைக் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி ராசிபுரம் டிஎஸ்பி பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகவனம், எஸ்ஐக்கள் மாணிக்கம், தங்கம் மற்றும் போலீசார் செந்திலுக்கு சொந்தமான மளிகைக் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவரது கடையில் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்ய போலீசார், செந்திலிடம் விசாரணை நடத்தியதில், பெங்களூருவில் இருந்து ராசிபுரத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்றில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அவர் கூறினார். அதன்பேரில் போலீசார் சேலம் ரோட்டில், வைரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் சாக்கு மூட்டைகளில், 500 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் டிரைவர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பெங்களூரிவில் இருந்து குட்காவை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி இராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா பதுக்கி வைத்த மளிகைக்காடைக்காரரர் செந்தில், லாரி டிரைவர் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள்ள 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!