இராசிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

இராசிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
X
இராசிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இராசிபுரம் அருகே உள்ள கார்கூடல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). சம்பவதவத்தன்று, இவர் ராசிபுரம் அருகே அத்திப்பலகானூர் ரெயில்வே மேம்பாலம் அருகில், கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ மாணிக்கம் மற்றும் போலீசார் அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கையில் வைத்திருந்த பையில் ரூ.500 மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையொட்டி கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர்.

கார்கூடல்பட்டி கிராமம் ஒன்பதாம் பாலிக்காட்டை சேர்ந்தவர் சுஜித் குமார் (24). கூலித்தொழிலாளி. இவர் ராசிபுரம் கோனேரிப்பட்டி சுடுகாடு அருகில் கையில் பையுடன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற எஸ்எஸ்ஐ காளியப்பன் மற்றும் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது பையில் ரூ.500 மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபபிடித்தனர். இதையொட்டி சுஜித்குமாரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!