மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: கணவர் விஷம் குடித்து தற்கொலை
பைல் படம்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் செம்பாலிபுதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கஸ்தூரி கணவரிடம் கோபித்து கொண்டு மகனுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மாமனார் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு சமரசம் செய்து அழைத்துள்ளார். கஸ்தூரி கணவர் செல்ல மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆயில்பட்டி போலீஸ் எஸ்.ஐ சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu