ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய ஆலோசனை முகாம்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய ஆலோசனை முகாம்
X

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம், திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய ஆலோசனை முகாம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய ஆலோசனை முகாம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

ரோட்டரி சங்க தலைவர் கருணாகர பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் தினகர் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட மருத்துவ சமுதாய சேவை சேர்மன் டாக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் உதவி கவர்னர் பாலாஜி, முன்னாள் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், மண்டல உதவி கவர்னர் ரவி, திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனை சிறப்பு மருத்துவர் சந்தோஷ்குமார் ஆகியோர் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.

முகாமை ரோட்டரி மாவட்ட மருத்துவ சமுதாய சேவை தலைவர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, இ.ஜி.ஜி, எக்கோ போன்ற பரிசோதணைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முடிவில் பொருளாளர் தனபால் நன்றி கூறினார்.

Tags

Next Story
smart agriculture iot ai