நாமகிரிப்பேட்டை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிய லாரியில் தீ விபத்து

நாமகிரிப்பேட்டை அருகே வைக்கோல்  பாரம் ஏற்றிய லாரியில் தீ விபத்து
X

தொ.ஜேடர்பாளையம் அருகே மின்கம்பி உரசியதால், வைக்கோல் பாரம் ஏற்றிய லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

நாமகிரிப்பேட்டை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிய லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. #ட்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து மாட்டு தீவனத்திற்கு, வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி, ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொ.ஜேடர்பாளையத்திற்கு வந்தது. லாரியை வாழப்பாடியை சேர்ந்த ரஜினிகாந்த் (39) என்பவர் ஓட்டி வந்தார்.

தொ.ஜேடர்கபாளையம் அருகே மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி வைக்கோல் மீது உரசியது. இதனால் வைக்கோலில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென லாரி முழுவதும் பரவி எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் ரஜினிகாந்த் மற்றும் பொதுமக்கள் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!