நாமகிரிப்பேட்டை அருகே துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

நாமகிரிப்பேட்டை அருகே துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
X
நாமகிரிப்பேட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

நாமகிரிப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் சிலர் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், ஆயில்பட்டி எஸ்ஐ மனோகரன் மற்றும் போலீசார் நாமகிரிப்பேட்டை பகுதியில் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நாரைக்கிணறு கிராமத்தில், விவசாயி மோகன் (44) என்பவரது வீட்டில் சோதனை நடத்தியபோது லைசென்ஸ் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்