இராசிபுரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

இராசிபுரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

கோப்பு படம் 

வி.நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இராசிபுரம், வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைக்குழு சார்பில், இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியியை தொடங்கி வைத்தார். தப்பாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், நாடகம் மூலமாக மாணவர்களுக்கு கெரோனா பற்றிய விழிப்புணர்வு, கற்றல் இடைவெளி, தனிமனித இடைவெளி , இல்லம் தேடிக் கல்வி குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மூலம் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர், பெற்றோர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story